முகப்பு  > வரவேற்புத் தொகுப்பு

வரவேற்புத் தொகுப்பு

​​​​​​​எல்லா முன்னோடிகளும் தங்களுடைய முன்னோடித் தலைமுறை வரவேற்புத் தொகுப்பை அஞ்சலில் 1 செப்டம்பர் 2014-க்கு முன்னர் பெற்றிருப்பார்கள். நீங்கள் வரவேற்புத் தொகுப்பை இன்னமும் பெறவில்லை எனில், அன்புகூர்ந்து உதவிக்கு 1800-650-6060 என்ற எண்ணை அழைக்கவும்.​

im_welcome_pack_2 

முன்னோடித் தலைமுறை அட்டை

முன்னோடிகள் தங்களுக்கான சிறப்பு  நன்மைகளைப் பெற, சாஸ் (CHAS) தனியார் மருந்தகங்களுக்கும் பல் மருந்தகங்களுக்கும் செல்லும்போது, தங்களுடைய முன்னோடித் தலைமுறை அட்டையை (தங்களுடைய அடையாள அட்டையுடன் சேர்த்து) எடுத்துச்செல்ல வேண்டும்.​​

முன்னோடிகள் தங்களுடைய முன்னோடித் தலைமுறை அட்டையை நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்கள் அல்லது பலதுறை மருந்தகங்களுக்கு எடுத்துச்செல்ல மறந்துவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. அவர்களின் முன்னோடித் தகுதிநிலை, கணினியில் தெரிவிக்கப்படும்.

im_welcome_pack_3 

மிக அருகாமையில் உள்ள 6 சாஸ்(CHAS)மருந்தகங்களின் பட்டியல்

எளிதில் தெரிந்துகொள்ள, முன்னோடியின் வீட்டு முகவரிக்கு மிக அருகாமையில் உள்ள ஆறு சாஸ் (CHAS) மருந்தகங்களின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு மருந்தகங்கள் தனியார் மருந்தகங்களாகும், கீழ் இருக்கும் இரண்டு மருந்தகங்கள் பல் மருந்தகங்களாகும்.​


im_welcome_pack_4 

CHAS மருந்தகத் தகவல்திரட்டு

முன்னோடிகள், நாடு முழுவதும், சாஸ் (CHAS) திட்டத்தில் பங்கேற்கும் எந்தவொரு தனியார் மருந்தகத்திற்கும் பல் மருந்தகத்திற்கும் செல்லலாம்.

சாஸ் (CHAS) தனியார் மருந்தகங்கள் மற்றும் பல் மருந்தகங்களின் முழுமையான பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது.

im_welcome_pack_5 

குளிர்பதனப் பெட்டி மெக்னெட்டுகள்​​

கடந்த பல ஆண்டுகளாக, சிங்கப்பூரின் மத்திய வர்த்தக வட்டாரத்தின் வளர்ச்சி, நமது முன்னோடிகளின் கடுமையான உழைப்பு, அவர்கள் சிந்திய வியர்வை ஆகியவற்றின் மூலம் அடையப்பெற்ற முன்னேற்றத்தின் சின்னம். அந்த வளர்ச்சி, நான்கு குளிர்பதனப் பெட்டி மெக்னெட்டுகளில், நான்கு மொழிகளிலும் வருணிக்கப்பட்டுள்ளது (ஆங்கிலம்,  சீனம், மலாய் மற்றும் தமிழ்).  

முன்னோடிகளும் அவர்களுடைய குடும்பங்களும் எளிதில் விவரங்களைத் தெரிந்துகொள்ள, முன்னோடித் தலைமுறைக்கான முக்கியத் தொலைபேசி எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

im_welcome_pack_6 

நன்மைகள் குறித்த சிறுபுத்தகம்

முன்னோடிகளுக்கான நன்மைகளை  நான்கு மொழிகளிலும் (ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ்) விவரிக்கும் சிறுபுத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் முன்னோடிகளுக்குக் கிடைக்கக்கூடியவைப்  பற்றிய முழுமையான மற்றும் விரிவான வழிகாட்டியை அது வழங்குகிறது.​

​​​​