இது சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஓர் இணையத்தளமாகும். எங்களுடைய தகவல் பாதுகாப்பு அறிக்கையைப் பார்த்ததற்கு நன்றி.
நீங்கள் இந்த இணையத்தளத்தில் வெறுமனே உலாவுகிறீர்கள் எனில், உங்களைத் தனிப்பட்ட முறையில் அடையாளம் காண்பதற்கு அனுமதிக்கும் தகவல்களை நாங்கள் எடுத்துக்கொள்வதில்லை.
முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தை நிர்வகிப்பதற்கு, அரசாங்கம் தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்கிறது. நீங்கள் செய்திருக்கும் எந்தவொரு விண்ணப்பத்தையும் செயல்படுத்துவதற்கோ, உங்களுக்குச் சேவையளிப்பதற்கோ, நாங்கள் பிற அரசாங்க அமைப்புகளுடன் (அல்லது குறிப்பிட்ட அரசாங்கச் சேவைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்ட அரசாங்கச் சார்பற்ற அமைப்புகள்) தேவையான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடும். சட்டத்தால் தடை செய்யப்படாதவரை, உங்களுக்கு மிகப் பயனுள்ள, செயல்திறன்மிக்க வழியில் சேவையளிப்பதற்கு இவ்வாறு பகிர்ந்துகொள்ளப்படுகிறது.
உங்கள் வசதிக்காக, நீங்கள் இதற்கு முன்னர் எங்களிடம் அல்லது மற்ற அரசாங்க அமைப்புகளிடம் கொடுத்த தகவல்களை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவும் கூடும். இது பரிவர்த்தனையை விரைவுப்படுத்தி, நீங்கள் மீண்டும் விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய சிரமத்தைத் தவிர்க்கும். அத்தகைய விவரங்கள் காலத்திற்கு ஒவ்வாமல் போனால், அன்புகூர்ந்து ஆகப் புதிய விவரங்களை எங்களிடம் தெரிவிக்கவும். உங்களுக்கு பொதுச் சேவைகளை திறம்பட வழங்குவதற்கான தேவையினால் மட்டுமே, நாங்கள் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைத் தொடர்ந்துவைத்துக் கொள்வோம்.
உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாக்க, அனைத்து மின்னணுச் சேமிப்புக் கருவிகளும், தனிப்பட்ட தகவல் மாற்று முறைகளும், தகுந்த பாதுகாப்புத் தொழில்நுட்பங்களுடன் பாதுகாக்கப்படுகின்றன.