​​​​ ​​​​

 APCMS.Sharepoint.PGP - NavigationBar

முகப்பு  > கண்ணோட்டம்
​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ​​​​ ​​​​ ​​​​

கண்ணோட்டம்​​​​ ​​  ​  ​ ​

நமது முன்னோடிகளின் கடுமையான உழைப்புக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் அவர்களைக் கௌரவித்து நன்றி தெரிவிக்கஅரசாங்கம் முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் சிங்கப்பூரை இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.


​​முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திலிருந்து ​சுமார் 450,000 சிங்கப்பூரர்கள் நன்மையடைவர்.​​​​​

 

என்னென்ன நன்மைகள்?

இத்தொகுப்புத் திட்டம், முன்னோடிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தங்களுடைய சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க உதவும்.​​
im_outpatient 
 

வெளிநோயாளிப் பராமரிப்பு

பலதுறை மருந்தகங்களிலும், நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும், சலுகைவிலை சேவைகளுக்குக் கூடுதலாக 50% கழிவு.​

பலதுறை மருந்தகங்களிலும், நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும், சலுகைவிலை மருந்துகளுக்குக் கூடுதலாக 50% கழிவு.

  • நன்மைகள் குறித்து மேல் விவரங்களை அறிய, அன்புகூர்ந்து ​​​இங்கு ​க்ளிக் செய்யவும்​​​​​

எல்லா சிங்கப்பூர்க் குடிமக்களுக்கும் முன்னோடிகளுக்கும் நிதி உதவி

​​ எல்லா சிங்கப்பூரர்களுக்கும் நிதி உதவி​ முன்னோடித் தலைமுறையினருக்கான சிறப்பு நிதியுதவி​
 
 
தனிநபர் மாதாந்திர குடும்ப வருமானம்​ வருமானம் இல்லாத குடும்பங்களுக்கான வருடாந்திர வீட்டு மதிப்பு​ எல்லா வயதினருக்கும் நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எல்லா முதியோருக்கும் பலதுறை மருந்தகங்களில்
சலுகை விலை சேவைகளுக்கு சலுகை விலை மருந்துகளுக்கு​​ சலுகை விலை சேவைகளுக்கு சலுகை விலை மருந்துகளுக்கு​​​
​$1,200
அல்லது அதற்கும்​ குறைவு*
$13, 000 அல்லது அதற்கும் குறைவு*70%75%​​75%
கூடுதலாக 50% கழிவு​
$1,201-$2,000*$13,001-$21,000*​60%75%
$2,000க்கு மேல் / விண்ணப்பிக்கவில்லை$21,000க்கு மேல் / விண்ணப்பிக்கவில்லை​50%​50%​

*​ கூடுதல் நிதியுதவிகளுக்கு விண்ணப்பம் செய்ய, நீங்கள் இங்கு படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கலாம், அல்லது உங்களுக்கு அருகாமையில் உள்ள சமூக நிலையம் மற்றும் மன்றம் (CC), சமூக மேம்பாட்டு மன்றம் (CDC), பலதுறை மருந்தகம் அல்லது ஏதேனும் பொது மருத்துவமனையிலிருந்து படிவத்தையும், முன்-கட்டணம் செலுத்தப்பட்ட வர்த்தகப் பதில் கடித உறையையும் பெற்றுக்கொள்ளலாம். உதவிக்கு நீங்கள் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளரையும் அணுகலாம்.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களுக்கு, மானியம் பெற்ற நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் மேலும் குறைவான கட்டணங்கள்

  • குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களில் உள்ள சிங்கப்பூரர்கள், சலுகைவிலை நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகச் சேவைகளுக்கும், சலுகைவிலை மருந்துகளுக்கும் அதிக நிதியுதவிகளைப் பெற்று மகிழலாம்.
  • ​ குறைந்த மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களில் உள்ள முன்னோடிகளும் இத்தகைய கூடுதல் நிதியுதவிகளையும், தங்களுடைய மானியம் பெற்ற மருத்துவக் கட்டணப் பட்டியலிலிருந்து முன்னோடிகளுக்கான நன்மைகளின்படி, “50%” கழிவையும் பெற்று மகிழலாம்.​
சமூகச் சுகாதார உதவித் திட்டத்தில் (CHAS) பங்கேற்கும் தனியார் மருந்தகங்களிலும் பல் மருந்தகங்களிலும் நிதியுதவிகளைப் பெற்று மகிழுங்கள். சாஸ் (CHAS) மருந்தகத்திற்குச் செல்லும்போது, உங்களுடைய முன்னோடித் தலைமுறை அட்டையை எடுத்துச் செல்லவும். நன்மைகள் குறித்து துல்லியமாக அறிந்துகொள்ள, அன்புகூர்ந்து இங்கு க்ளிக் செய்யவும்.​

சாஸ் (CHAS) குறித்தும், ஆக அண்மைத் தகவல்கள் குறித்தும் மேலும் தெரிந்துகொள்ள, அன்புகூர்ந்து இங்கு க்ளிக் செய்யவும்.​​

மிதமான, கடுமையான செயல்பாட்டு இயலாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இயலாமையுள்ள முன்னோடித் தலைமுறையினருக்கான உதவித் திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு $1,200 ரொக்கம். திட்டம் குறித்தும், ஆக அண்மைத் தகவல்கள் குறித்தும் மேலும் தெரிந்துகொள்ள, அன்புகூர்ந்து இங்கு க்ளிக் செய்யவும்.​​
 
im_medishield  
 

மெடிஷீல்டு லைஃப்

60% வரையிலான சிறப்புச் சந்தா நிதியுதவிகள், மெடிசேவ் நிரப்புத்தொகைகள் ($250 - $900) ஆகியவற்றுடன், எல்லா முன்னோடித் தலைமுறையினரின் மெடிஷீல்டு லைஃப் சந்தாக்களுக்கு ஆதரவு. இதனால்:

  • 1934 அல்லது அதற்கு முன்னர் பிறந்த முன்னோடித் தலைமுறையினர்: சந்தாக்கள் முழுமையாகச் செலுத்தப்படும்
  • 1935க்கும் 1949க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த முன்னோடித் தலைமுறையினர்: சந்தாக்களில், மூன்றில் சுமார் இரண்டு பங்குகள் செலுத்தப்படும்


    MSHL - Tamil.PNG


    எல்லா முன்னோடித் தலைமுறையினரும் வருடாந்திர மெடிசேவ் நிரப்புத்தொகைகளைப் பெறுவர். இந்தத் தொகைகள், அவர்கள் பிறந்த ஆண்டைப் பொறுத்து, $250 முதல் $900 வரை இருக்கும். சந்தாக்களை மேலும் ஈடுசெய்ய, இந்த நிரப்புத்தொகைகள் பயன்படுத்தப்படலாம். ஏற்கனவே கடும் உடல்நலப் பிரச்சினைகள் கொண்ட முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த மூத்தவர்கள், 2021 முதல் 2025 வரை, $50-$200 மதிப்புள்ள கூடுதலான மெடிசேவ் நிரப்புத்தொகைகளைப் பெறுவர். இவை, அதிகரிக்கப்பட்டுள்ள மெடிஷீல்டு லைஃப் சந்தாக்களைச் செலுத்துவதன் பொருட்டு அவர்களுக்கு உதவும்.


    1
    சந்தாக்கள், குறிப்பிடப்பட்டிருக்கும் பலன்களின் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டவை. அவை, சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளின் மாற்றங்கள் போன்றவற்றுக்கேற்ப மாற்றப்படலாம். செலுத்தவேண்டிய மெடிஷீல்டு லைஃப் சந்தா (தகுந்த நிதியுதவிகள் ஏதேனும் இருப்பின், அவற்றுக்குப் பிறகு) குறித்த எழுத்துபூர்வ அறிவிப்பை, சந்தா கழிக்கப்படுவதற்கு முன்னர், மத்திய சேமநிதிக் கழகம் வழங்கும்.
    2 ​அடுத்த பிறந்த நாளன்று வயது என்பது, காப்புறுதி புதுப்பிக்கப்பட்ட தேதிக்குப் பிறகு, முன்னோடித் தலைமுறையினரின் அடுத்த பிறந்த நாளன்று, அவருக்குப் பூர்த்தியாகும் வயதைக் குறிப்பதாகும்.
    3முன்னோடித் தலைமுறையினர் கடுமையான நோயினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால், 30% கூடுதல் சந்தா செலுத்த வேண்டியிருக்கும்.​​​
    4ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் கொவிட்-19 நிதியுதவித் தொகை (முதல் ஆண்டுக்காக) இப்பகுதியில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.


    மெடிஷீல்டு லைஃப் குறித்து மேல் விவரங்களைப் பெற, அன்புகூர்ந்து இங்கு சொடுக்கவும்.
 ​

im_medisave  
 

மெடிசேவ் நிரப்புத்தொகைகள்

வாழ்நாள் முழுவதும்1 , ஆண்டுதோறும் $250 முதல் $900 வரை
அதிக வயதுடையோருக்குக் கூடுதலான நிரப்புத்தொகைகள்
2021 முதல் 2025 வரை

2021 to 2025 - Tamil (002).PNG
2026க்கும் அப்பால்

Beyond 2026 chart - Tamil (002).PNG



 மெடிசேவ் நிரப்புத்தொகை ஆண்டு 2021 முதல் (முன்னதாக $200-$800) அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடுமையான மருத்துவப் பிரச்சினைகளைக் கொண்ட முன்னோடித் தலைமுறையினர், 2021 முதல் 2025 வரை, ஆண்டுக்கு $50 முதல் $200 வரை கூடுதல் நிரப்புத்தொகைகளைப் பெறுவர்.
 
im_disability​ 
 

இயலாமையுள்ள முன்னோடித் தலைமுறையினருக்கான உதவித் திட்டம்​

பின்வரும் அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் குறைந்தது மூன்றைச் செய்வதற்கு நிரந்தரமாக உதவி தேவைப்படும் முன்னோடிகளுக்கானது:
-  சாப்பிடுவது
-  குளிப்பது
-  ஆடை உடுத்திக்கொள்வது
-  இடம்விட்டு இடமாறுவது
-  கழிவறை பயன்படுத்துவது
-  நடப்பது அல்லது நகர்வது​​
முன்னோடிகளுக்கு அவர்களுடைய பராமரிப்புச் செலவுகளில் உதவிட, வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் $100 ரொக்க உதவி. இத்திட்டம் குறித்து மேல்விவரங்களை அறிய, அன்புகூர்ந்து இங்கு​ க்ளிக் செய்யவும்.​
​​​​

யார் தகுதி பெறுகிறார்?​


பின்வரும் 2 நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் சிங்கப்பூர்க் குடிமக்கள்:​
a. 1965-இல் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் - அதாவது:
  • ​31 டிசம்பர் 1949 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவர்கள்
  • 2014-இல் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்
மற்றும்
b. 31 டிசம்பர் 1986 அன்று அல்லது அதற்கு முன்னர் குடியுரிமை பெற்றவர்கள்.
முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திற்குத் தகுதி பெறுபவர்கள், ஜூன் 2014-இல் ஓர் அறிவிப்புக் கடிதத்தைப் பெற்றிருப்பார்கள். அன்புகூர்ந்து, அடையாள அட்டையில் உங்களின் தற்போதைய முகவரி இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்யவும்.
அந்த இரண்டு கூறுகளில், உங்களுடைய தகுதிநிலையைச் சரிபார்க்க விரும்பினால், நீங்கள் இங்கு சுயமாகச் சரிபார்த்துக்கொள்ளலாம், அல்லது 1800-2222-888 என்ற முன்னோடித் தலைமுறைக்கான  தொலைபேசி எண்ணை அழைக்கலாம். ​
​ ​​