நமது முன்னோடிகளின் கடுமையான உழைப்புக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் அவர்களைக் கௌரவித்து நன்றி தெரிவிக்க, அரசாங்கம் முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்கள் சிங்கப்பூரை இன்று இருக்கும் நிலைக்கு உயர்த்தியுள்ளனர். முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்திலிருந்து சுமார் 450,000 சிங்கப்பூரர்கள் நன்மையடைவர்.
இத்தொகுப்புத் திட்டம், முன்னோடிகளுக்கு வாழ்நாள் முழுவதும் தங்களுடைய சுகாதாரப் பராமரிப்புச் செலவுகளைச் சமாளிக்க உதவும்.