மானியம் பெற்ற நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் சலுகைவிலை சேவைகளுக்கு முன்னோடித் தலைமுறை நோயாளிகள் கூடுதலாக 50% கழிவைப் பெறுவார்கள். நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகச் சேவைகளுக்கான கூடுதல் நிதியுதவிகளுக்கும் மேல் இது வழங்கப்படும். இதில், மருத்துவரைக் காண்பதற்கான கட்டணங்கள், பெரும்பாலான நோயாளிகளுக்குத் தேவைப்படும் பரிசோதனைகள் (எ.கா., இரத்தப் பரிசோதனைகள், ஊடுகதிர்ச் சோதனைகள்) ஆகியவை அடங்கும். தனியார் நோயாளிகளுக்கு நிதியுதவிகள் பொருந்தா.
மானியம் பெற்ற நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் சலுகைவிலை மருந்துகளுக்கு முன்னோடிகள் கூடுதலாக 50% கழிவையும் பெறுவார்கள்.
எல்லா சிங்கப்பூர்க் குடிமக்களுக்கும் முன்னோடிகளுக்கும் நிதியுதவி
எல்லா சிங்கப்பூரர்களுக்கும் நிதியுதவி | முன்னோடித் தலைமுறைக்கான சிறப்பு நிதியுதவி |
---|
தனிநபர் மாதாந்திர குடும்ப வருமானம் | வருமானம் இல்லாத குடும்பங்களுக்கான வருடாந்திர வீட்டு மதிப்பு | எல்லா வயதினருக்கும் நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகங்களில் | 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய எல்லா முதியோருக்கும் பலதுறை மருந்தகங்களில் |
---|
சலுகைவிலை சேவைகளுக்கு | சலுகைவிலை மருந்துகளுக்கு | சலுகைவிலை சேவைகளுக்கு | சலுகைவிலை மருந்துகளுக்கு |
---|
$1,200 மற்றும் அதற்கும்குறைவு* | $13,000 மற்றும் அதற்குக் குறைவு* | 70% | 75% | 75% | கூடுதலாக 50% கழிவு
|
$1,201-$2,000* | $13,001-$21,000* | 60% | 75% |
$2,000க்கு மேல் / விண்ணப்பிக்கவில்லை | $21,000க்கு மேல் / விண்ணப்பிக்கவில்லை | 50% | 50% |
*கூடுதல் நிதியுதவிக்கு விண்ணப்பம் செய்ய, நீங்கள்
இங்கிருந்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கலாம், அல்லது உங்களுக்கு மிக அருகாமையில் உள்ள சமூக நிலையம் மற்றும் மன்றம் (CC), சமூக மேம்பாட்டு மன்றம் (CDC), பலதுறை மருந்தகம் அல்லது ஏதேனும் பொது மருத்துவமனையில் இருந்து படிவத்தையும், முன்கட்டணம் செலுத்தப்பட்ட வர்த்தகப் பதில் கடித உறையையும் பெற்றுக்கொள்ளலாம். உதவிக்கு நீங்கள் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளரையும் அணுகலாம்.
நீங்கள் குறைந்த மற்றும்
நடுத்தர வருமானம் ஈட்டுபவர் என இதற்கு முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தால்,
நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகச் சேவைகளுக்கான கூடுதல் நிதியுதவிகளுக்கு நீங்கள்
தகுதிபெறுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் தற்போது நீலம் அல்லது ஆரஞ்சு நிற
சுகாதார உதவி அட்டையை வைத்திருந்தால், நீங்கள் மதிப்பீட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பீர்கள்.
எனவே, நீங்கள் வேறு எதையும் செய்ய வேண்டியதில்லை. உங்களுக்குத் தானாகவே கூடுதல்
நிதியுதவிகள் கிடைக்கும்.
நீங்கள் இதற்கு முன்னர் மதிப்பீட்டுச்
சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை எனில், அன்புகூர்ந்து கூடுதல் நிபுணத்துவ
வெளிநோயாளி மருந்தக நிதி உதவிகளிலிருந்து நன்மை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யவும். இது, சாஸ் (CHAS) திட்டத்துக்கான விண்ணப்பச் செயல்முறை போன்றதே. பொது மருத்துவமனைகள், பலதுறை
மருந்தகங்கள், சமூக நிலையங்கள் மற்றும் மன்றங்கள் (CCs) அல்லது சமூக மேம்பாட்டு
மன்றங்களில் (CDC) விண்ணப்பப் படிவத்தைப் பெறலாம். மாறாக, இப்படிவங்களை
www.chas.sg என்ற இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
உங்களுக்கு இதற்கு முன்னர் மதிப்பீட்டுச்
சோதனை மேற்கொள்ளப்பட்டதா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை எனில்,
1800-650-6060 என்ற எண்ணை அழைத்து அறிந்துகொள்ளலாம்..
முன்னோடிகள் பலதுறை மருந்தகத்தில், சலுகைவிலை சேவைகளுக்குக் கூடுதலாக 50% கட்டணக் கழிவைப் பெறுவார்கள். இதில், மருத்துவரைக் காண்பதற்கான கட்டணங்கள், பெரும்பாலான நோயாளிகளுக்குத் தேவைப்படும் பரிசோதனைகள் (எ.கா., இரத்தப் பரிசோதனைகள், ஊடுகதிர்ச் சோதனைகள்) ஆகியவை அடங்கும்.